வாழ்க நலமுடன். சம்பாதிக்க எண்ணம் உள்ளவரா நீங்கள்! உழைக்க விருப்பம் உள்ளவரா நீங்கள்! ஆனால் உங்களிடம் தொழில் தொடங்க பணம் இல்லையா. கவலை வேண்டாம்! உங்களுக்காக இங்கே அதற்கான வழியை காட்டுகிறோம். படித்து அதன் மூலம் நீங்கள் பயன் பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறோம்.
google image |
இப்பொழுது எப்படி தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம். நமது அரசாங்கம் தொழில் தொடங்க லோன் (Loan) வசதியை ஏற்படுத்தி உள்ளது, அதை வைத்து தொழில் தொடங்கலாம்.
அன்பர்களே இந்த பதிவில் இன்று நாம் பார்க்கப்போவது மாட்டுப்பண்ணை வைத்து அதிகம் சம்பாதிக்க என்ன வழி என்று பார்க்கலாம். மாட்டுப்பண்ணை தொடங்குவதற்கு என்ன லோன் (Loan) வாங்கலாம். எங்கே வாங்கலாம். அதன் பயன் என்ன என்று பார்க்கலாம்.
Nabard-dairy scheme (நபர்ட்- பால் திட்டம்) மூலம் பணம் பெறலாம். இந்த திட்டம் பற்றி பார்க்கலாம். Nabard என்றால் என்ன? Nabard என்பது வேளாண்மை மற்றும் கிராம அபிவிருத்திக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture and rural development). இந்த திட்டத்தின் கீழ் லோன் (Loan) பெறலாம். வேளாண்மை, குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், சிறு அளவிலான தொழில்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளை கிராமப்புறங்களில் மேம்படுத்துவதற்கும் கடன் மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு கட்டளை கொண்ட ஒரு அபிவிருத்தி திட்டம்.
இந்த திட்டத்தில் எப்படி லோன் (Loan) பெறலாம்?
உங்கள் அருகில் உள்ள பேங்க் (வங்கி) நேஷனல் பேங்க், தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி மூலம் பெறலாம். இதன் மூலம் பால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, வியாபாரம் செய்ய இந்த திட்டம் மூலம் பணம் பெறலாம். இந்த திட்டத்தில் மாடு வாங்கலாம், பால் கறவை இயந்திரம், பதப்படுவதற்கு, பால் வாகனம், இப்படி பால் சம்பந்த பட்ட தொழில்களுக்கு மானியம் வழங்குகிறது.
யார் பயன் பெறலாம்?
விவசாயி, தனிநபர் அல்லது கூட்டுத்தொழில் பண்ணுவோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ஒருநபர் ஒருமுறை மட்டும் தான் மாடு வாங்க தகுதியுள்ளது. தொழில் நன்றாக போகிறதுயென்று மற்றொருமுறை அதே மாடு வாங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் நீங்கள் மற்ற திட்டத்தில் விண்ணப்பிக்கலாம், அதாவது கறவை இயந்திரம் வாங்கலாம், வியாபாரத்திற்கு வாங்கலாம். அல்லது உங்கள் அண்ணன், தம்பி பெயரில் அதே திட்டத்தில் மாடு வாங்கலாம் ஆனால் இரண்டு மாடு பண்ணைக்கும் நடுவில் குறைந்தது 500 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெய், பால்கோவா போன்ற தொழில் செய்வதற்கும் அதை நீங்களே வியாபாரம் செய்வதற்கும் இந்த திட்டத்தில் மானியம் பயன்பெறலாம்.
மானியம் வரைமுறை
தனிநபருக்கு ஒரு திட்டத்திற்கு 25% மானியம் (Subsidy) தருகிறார்கள். இதே SC, ST வகுப்பினருக்கு 33% மானியம் (Subsidy) தருகிறார்கள். தொழில் தொடுங் குபவர் லோன் (Loan) வாங்கும் போது நீங்கள் 10% நிதி கட்டாயம் நீங்கள் போட்டு ஆரமிக்க வேண்டும். மீதம் உள்ள தொகை லோன் (Loan) மூலம் கிடைக்கும் அதில் மானியம் (Subsidy) உங்களுக்கு வரும்.
எப்படி விண்ணப்பிப்பது?
Deds- Dairy entrapenurship development scheme (பால் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்) மூலம் நீங்கள் மானியம் பெறலாம். அதற்கு நீங்கள் ஒரு திட்டத்தை வரைவு படுத்த வேண்டும். அதாவது நீங்கள் எத்தனை மாடு வாங்க போகுறீர்கள், வாங்கி பண்ணை எங்க வைக்க போகுறீர்கள், அதற்கு உண்டான தொகை எவ்வளவு? இது போன்ற திட்டத்தை தயார் செய்து அருகில் உள்ள பேங்கில் விண்ணப்பிக்கலாம். உங்கள் திட்டத்தை பேங்க் ஊழியர் விவரித்து, நீங்கள் அளித்த திட்டவரைவை ஆராய்ந்து அது தகுதி இருந்தால் அதை அவர்களே Nabard இந்த திட்டத்தில் பதிவு செய்வார்கள். உங்கள் திட்டம் தேர்வு செய்யப்பட்டால் உங்கள் மானிய தொகையை உங்கள் லோன் (Loan) தொகையில் கழித்து கொள்ளுவார்கள்.
இந்த திட்டம் உங்களுக்கு குறைந்தது 2 மாடுகளில் இருந்து அதிகமாக 10 மாடுகள் வரை தருகிறார்கள். இதில் அதிகமாக ஒருமாட்டிற்கு Rs 17,500/- வரை தருகிறார்கள். மானியமாக (Subsidy) 25% தருகிறார்கள். பதப்படுத்தும் இயந்திரம் வாங்க 20 லட்சம் வரை தருகிறார்கள். இதற்கும் மானியமாக (Subsidy) 25% தருகிறார்கள். பால் கொண்டுபோக அல்லது இதர பால் சம்பந்த பட்ட பொருள்களை கொண்டுபோக வாகனம் வாங்குவதற்கும் லோன் (Loan) தொகை 26 லட்சம் வரையும், அதற்கு மானியமும் (Subsidy) 25% தருகிறார்கள்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் அன்பர்களே!. மேலும் தெரிந்து கொள்ள Nabard இணையதளத்தில் click here தெரிந்து கொள்ளுங்கள். பேங்க் தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் அன்பர்களே!. மேலும் தெரிந்து கொள்ள Nabard இணையதளத்தில் click here தெரிந்து கொள்ளுங்கள். பேங்க் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments