Why am need to understand cosmic power? ஏன் பிரபஞ்சத்தை பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதனால் எனக்கு என்ன பயன்?

பிரபஞ்சத்தின் ஆற்றல் மிக அளப்பெரியது. இதை நம் முன்னோர்கள் (சித்தர்கள்) மிக அழகாக கையாண்டார்கள். இந்த அற்புத சக்தியை கொண்டு அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்கள் கண்ட, கற்றவற்றை ஏடுகளில் எழுதி நமக்காக அருளி சென்றனர். இன்றும் அதை சிலர் கடை பிடித்து வருகின்றனர்.

                                    

உங்களுக்கு இப்பொது மனதில் தோன்றும் கேள்வி ஏன் பிரபஞ்சத்தை பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதனால் எனக்கு என்ன பயன்?. இதற்கும் என் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம்?




உங்களின் கேள்வி நியமானது தான். ஆம் இந்த கேள்விகளுக்கு தொடர்ந்து படியுங்கள்.

பிரபஞ்சத்தின் ஆற்றலை கொண்டு நீங்கள் நினைத்ததை செயல் படுத்த முடியும். நீங்கள் மனதில் நினைத்த காரியம் தான் செயலாய் முடியம். நாம் என்ன நினைக்குறோமோ அது பிரபஞ்சத்தில் கலந்து அது நமக்கு செயலாய் மாறுகிறது. நம்முங்கள்!  அமைதியாக உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை மனதில் நீங்கள் சிந்தித்து பாருங்கள். நீங்கள் எதாவது ஒன்றை ஆழ் மனதில் தொடர்ந்து நினைத்து அது நடந்துருக்கும்.

உங்கள் ஆழ் மனதில் எதை அதிகமாக நினைக்குறீர்களோ அதை பிரபஞ்சம் நமக்கு அருளும். நீங்கள் எதிர்மறையாக நினைத்தீர்கள் என்றால் அதுபோல சூழ்நிலைகளை தான் பிரபஞ்சம் நமக்கு தரும்.  ஆதலால் உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்துங்கள்.  நேர்மறையான எண்ணங்களை முறைப்படுத்துங்கள். நீங்கள் இதில் நன்கு பழகினால் உங்களுக்கு நல்ல வாழ்வு அமையும்வாழ்வில் அமைதி நிலவும். கோடியேஸ்வரர் ஆகலாம்.


பிரபஞ்சத்தின் ஆற்றலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அது தான் பிரபஞ்ச ரகசியம்.  நீங்களும் உங்கள் குடும்பமும் வளமுடன் வாழ இந்த பிரபஞ்ச ரகசியத்தை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.


அன்பர்களே நானும் வாழ்க்கையில் கஷ்ட பட்டு கொண்டு இருந்தேன்.  அப்போது இந்த பிரபஞ்ச ரகசியம் பற்றி முன்னும் ஒரு முறை கேள்வி பட்டு அதை தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சி செய்து பின் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்ததை தெரிந்து கொண்டு அது படி நடந்து கொண்டு இருக்கிறேன்.  இப்பொழுது உண்மையிலேயே எனது வாழ்கை மிக்க சிறப்பாக பொய் கொண்டுஇருக்கிறது. 


எனக்கு தெரிந்த சில்லவற்றை தங்களுக்கும் தெரிய படுத்தி நீங்களும் உங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்பதற்காகவே இதை ஆரம்பித்து தாங்களும் நலம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் இதை எழுதுகிறேன். நீங்களும் படித்து பயன்பெறுக. உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்க.

அன்பர்களே மேலும் தெரிந்து கொள்ள அடுத்த பதிவை பார்க்கவும்.

அடுத்த பதிவு ஓரை பற்றிய பதிவை தெரிந்து கொண்டு அடுத்து பிரபஞ்சத்தின் அடுத்த நகர்வுக்கு செல்லலாம். 

ஓரை பதிவுக்கு செல்ல இங்கே அழுத்தவும்

https://kalanchiyamhunt.blogspot.com/2019/07/horai.html 




Post a Comment

0 Comments