தரிசு நிலத்திற்கு பணத்தை அள்ளித்தரும் மத்திய அரசின் விவசாய திட்டம்

இன்றைய சூழ்நிலையில் வானம் பொய்த்துவிட்டது, மழை இல்லை, விவசாயம் இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இதில் விவசாயின் நிலைமையோ மிகவும் பரிதாபமானது. 



இதனால் மத்திய அரசு பல திட்டங்களை செயல் படுத்த முற்படுகிறது. இதில் இப்பொழுது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தப்போகிறது. விவசாயிகள் தங்களிடம் உள்ள தரிசு நிலம் அல்லது குறைந்த விளைச்சல் உள்ள நிலத்தின் மூலம் சம்பாதிக்க முடியும்.  


ரூ .34,422 கோடி மத்திய உதவியுடன் கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகாபியான் (குசும்)- Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (KUSUM) திட்டத்தை அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் 25.75 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ) சூரிய ஆற்றல் திறன்களைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நிதி மற்றும் நீர் பாதுகாப்பை வழங்குவதற்காக கொண்டுவந்துள்ளது. 


நம் அனைவர்க்கும் தெரியும் சூரியஒளியின் மூலம் மின்சாரம் பெறமுடியும் என்று அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும். அதற்கான திட்டம் தான் குசும் திட்டம் (KUSUM SCHEME).  


திட்டத்தின் படி விவசாயின் நிலத்தில் ஒரு சோலார் பேனல் நிறுவபடும். தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு, பஞ்சாயத்துகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்  (எஃப்.பி.ஓ) தங்கள் தரிசு அல்லது  குறைந்த விளைச்சல் நிலங்களில் 500 கிலோவாட் (KV) முதல் 2 (MV) மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள்  அமைக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்தந்த மாநில மின்சார ஒழுங்குமுறை கமிஷன்களால் (எஸ்.இ.ஆர்.சி) நிர்ணயிக்கப்படும்  கட்டணத்தில் விநியோக நிறுவனங்களால் (டிஸ்கோம்) வாங்கப்படும்.


இத்திட்டம் கிராமப்புற நில உரிமையாளர்களுக்கு நிலையான மற்றும் தொடர்ச்சியான வருமான ஆதாரத்தைத் அதிகரிக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 0.40 என்ற செயல்திறன் அடிப்படையிலான சலுகைகள் டிஸ்கோம்களுக்கு வழங்கப்படும்.


இது விவசாயிகளுக்கு தலா 0.5 முதல் 2 மெகாவாட் இடைநிலை திறன் கொண்ட மொத்த 10 ஜிகாவாட் சூரிய மின் நிலையங்களை நிறுவ உதவும். 50,000 கட்டம் இணைக்கப்பட்ட குழாய் கிணறுகள் / லிப்ட் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களையும் இது திட்டமிட்டுள்ளது.


இந்த திட்டத்தின் மூலம் அதிக சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்.

Post a Comment

0 Comments